2018 ஜூலை மாதம் எட்டாம் திகதி முகநூல் பக்கம் ஒன்றின் மூலமாக
ஆரம்பிக்கப்பட்ட எமது சேவைகள் இன்றளவிலும் மக்கள் மனம் விரும்பும்
வகையிலும் தொழில் ரீதியிலான ஆக்கபூர்வமான பதிவுகளையும் பல
வழிகாட்டல் கருத்தரங்குகளையும் வழங்கி கொண்டிருக்கிறது.
SRILANKAN BUSINESS IDEAS என்பது பல அம்சங்களை கொண்டு
இயங்குகிறது.இலங்கை திருநாட்டில் வாழும் ஒவ்வொரு சாமானிய
மனிதனின் உள்ளங்களில் ஒரு சுயதொழில் ரீதியிலான தூண்டுதலையும்
மாற்றங்களையும் ஏற்படுத்துவதன் மூலம் ஒரு சொந்த தொழில் முயற்சிக்கு
வழிகாட்டுவதை பிரதான நோக்கமாக கொண்டு செயல்படுகிறது.
கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக முகநூல் பக்கத்தின் வாயிலாக பல
நூற்றுக்கணக்கான பதிவுகள் மூலம் பல்லாயிரம் மக்களை எம்மோடு
இணைத்து வெற்றிகரமான பாதையில் பல தடைகளை தாண்டி பயணித்துக்
கொண்டிருக்கின்றோம்.
பலரை சொந்த தொழிலுக்கு தயார்படுத்தி சுயமாக முயற்சி செய்ய
கற்றுக்கொடுத்துள்ளோம்.அவர்களை போன்ற பலரையும் உருவாக்கும்
முயற்சியில் நாம் இரவு பகலாக சேவையாற்றி வருகின்றோம்.கிழக்கு
மாகாணம் மட்டுமல்ல. இலங்கையின் அனைத்து பாகங்களிலும் உள்ள
மக்களும் வெளிநாட்டில் பணிபுரிகின்ற ஏராளமான இலங்கையர்களும்
எம்மோடு இணைந்து பயணித்துக்கொண்டுள்ளனர்.
தொழில் வழிகாட்டல் கருத்தரங்குகள், மின்னூல் வெளியீடு, ஆன்லைன்
மூலம் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பயிற்சிகள், அச்சிடப்பட்ட
தொழில் பிசினஸ் ஐடியா நூல்கள் என்பன எமது சேவைகளாகும்.