நீங்கள் தேனீ வளர்க்க விரும்புகிறீர்களா..?
இலங்கையில் தேனீ வளர்ப்பு தொடர்பில் அதிகளவான நபர்களுக்கு ஆர்வம் இருந்தாலும் முறையாக அதைப்பற்றி கற்றுக்கொள்ள முடியாமலுள்ளது.இந்தியாவில் தமிழ்நாட்டில் விவசாயத்தில் ஈடுபட கூடிய பெரும்பாலான நபர்கள் இதை முழுநேரத் தொழிலாக செய்து வருகின்றனர்.
தேனி வளர்ப்பு என்பது மிகவும் லாபகரமான ஒரு தொழிலாகும். பொறுமையாக இத்தொழிலை கவனமாக செய்யக்கூடியவர்கள் குறிப்பிட்ட காலத்தின் பின்னர் கணிசமான வருமானம் ஈட்ட கூடியவர்களாக இருக்கின்றனர்.
பட்டியலை தயார் செய்து அதில் வளர்ப்பு தேனீ களைக் கொண்டு கூடுதலான தேனீக்களை ஈர்க்கும் நுட்பம் இதில் பயன்படுத்தப் படுகின்றது.
தேனீ வளர்ப்பு தொடர்பாக பயிற்சிகளை வழங்க கூடிய சில முகநூல் பக்கங்கள் யாழ்ப்பாணம் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேசத்தை அடிப்படையாகக்கொண்டு பயிற்சிகளை வழங்க கூடியதை அறியமுடிகின்றது.
தேனீ வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர்களாக இருந்தால் நீங்கள் அரசாங்கத்தில் ஏயே அதற்குரிய பயிற்சிகளை பெறக்கூடிய விவசாயத் திணைக்களத்தின் கீழ் இயங்க கூடிய ஒரு பயிற்சிக்கூடம் ஆன தேனீ அபிவிருத்தி அலகு - பிந்துனுவெவ - பண்டாரவெல பிரதேசத்தில் அமைந்துள்ளது.
விவசாய திணைக்களத்தினை நேரடியாக தொடர்பு கொண்டு நீங்கள் அவசியம் விபரங்களை கேட்டறியுங்கள்.எம்மில் பெரும்பாலான மக்கள் அரச திணைக்களங்களின் சேவைகளை அறியாமலேயே இருந்துவிடுகின்றோம்.

0 Comments