தனது நண்பருடன் இணைந்து Student விசா சேவை வழங்கும் தொழிலை செய்து இருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் பேங்காக் மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் இருந்து நேரடியாக பொருட்களைக் கொண்டுவந்து வியாபாரம் செய்து கொண்டிருந்த நிலையில் முதலாவது கொரோனா பரவலில் செய்துகொண்டிருந்த அனைத்து வியாபாரமும் தொடர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
அதைப்பற்றி கவலைப்பட்டு நேர காலத்தை வீணடிக்காமல் என்ன செய்வது என சிந்தித்துக் கொண்டிருந்தபோது இணையத்தில் சில விடயங்களை தேடிக்கொண்டிருந்த நேரத்தில் கோழிகுஞ்சு வியாபாரம் சிறந்ததொரு தொழிலாக இருக்கலாம் என நம்பி சிறிய அளவில் ஆரம்பித்திருக்கிறார்கள்.
ஆரம்பத்தில் 500 கோழிக்குஞ்சுகளை வெறும் 2 ரூபா இலாபம் வைத்து ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்க முதல்தடவையாக வியாபாரம் செய்துள்ளனர். கிடைத்தது மிகச்சிறிய இலாபம் தான் எனினும் அதைத் தொடர்ச்சியாக செய்தால் நல்லதொரு தொழிலாக மாற்றலாம் என்ற நம்பிக்கை இருந்துள்ளது.
அவர்களுடைய தொழிலை முகநூலிலும் ஏனைய சமூக வலைத்தளங்களிலும் தொடர்ச்சியாக பதிவிட்டு தனது வியாபாரத்திற்கு என சொந்தமாக முகநூல் பக்கம் ஒன்றை ஆரம்பித்து தொடர்ச்சியாக அவர்கள் வழங்கிவரும் இடங்கள் தொடர்பில் பதிவிட்டு வந்துள்ளனர்.
அந்த நேரத்தில் அதிகளவான இடங்களில் கோழிக்குஞ்சுகளுக்கான தேவைகள் கூடுதலாக இருந்த நேரத்தில் அவர்கள் சந்தர்ப்பத்தில் தொழிலை ஆரம்பித்திருப்பது மிகவும் கைகொடுத்திருக்கிறது.
தருணம் பார்த்து ஆரம்பித்த இந்த தொழிலானது இலங்கை பூராக தற்போது Diamond Farm எனும் பெயரில் பெருவாரியான இடங்களில் வியாபாரம் விரிவடைந்துள்ளது.
இவர்களுடைய வியாபார வெற்றிக்கு காரணமாக இருக்கக்கூடிய ஒரு விடயம் என்னவென்றால் சரியான நேரத்தில் சரியான ஒரு வியாபாரத்தை தேர்ந்தெடுத்து சமூக வலைத்தளங்களை சரியாக பயன்படுத்தும் போது எந்த வியாபாரத்தையும் வருங்காலத்தில் வெற்றியடையச் செய்யலாம்.
அத்துடன் இன்றைய இளம் தலைமுறையினர் இணையத்தில் தொழில் தொடர்பான தேடல்களை தேடும் போது நிச்சயமாக அதற்குரிய வழிகளை உருவாக்கலாம் என்று அதன் உரிமையாளர் இம்தியாஸ் குறிப்பிட்டார்.
தற்காலத்தில் என்ன செய்வது என தேடிக்கொண்டிருக்கும் பலருக்கு இணையமே கோடிக்கணக்கான விடயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறது. நேர காலங்களை பொடுபோக்காக கழிக்காமல் சமூக வலைத்தளங்களை கூட சிறப்பாக பயன்படுத்தினால் எமக்கான சொந்தத் தொழில் ஒன்றை உருவாக்கலாம் என்பது Diamond Farm இடம் இருந்து கிடைக்கும் படிப்பினையாகும்.
தொடர்பு கொள்ளுங்கள்
MSM. IMTHIYAS
DIAMOND FARM
CHICKS DISTRIBUTOR
AHADIYA TOWN
DUMMALASOORIYA
KURUNEGALA
உங்கள் கருத்துக்களை அவசியம் பதிவிடுங்கள்


2 Comments
Really 🌹
ReplyDeleteGreat opportunity congratulations Diamond Farm.
ReplyDeleteSo thank you very much SLBI