சூப்பர்மார்க்கெட் ஒன்றை புதிதாக ஆரம்பிப்பது என்பது குறைந்த முதலீட்டை கொண்டு உருவாக்கிவிட முடியாது. மேலைத்தேய நாடுகளிலிருந்து உருவான சூப்பர்மார்க்கெட் அமைப்பு அங்குள்ள மக்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளவே இவை உருவாக்கப்பட்டது.
இன்றைய காலத்தில் இலங்கையிலும் ஒவ்வொரு பிரதேசத்திலும் தனியாருக்கு சொந்தமான ஏராளமான சூப்பர்மார்க்கெட்கள் பூட்சிட்டிகள் எனும் பெயரிலும் பலர் நடத்துவதை காணலாம்.
இலங்கையில் கார்கில்ஸ் பூட்சிட்டி முன்னூறு கிளைகளை கொண்டு இயங்குகிறது. அவர்கள் தான் உலக பிரபல வெளிநாட்டு உணவகமான KFC க்கும் உரிமம் பெற்றவர்கள். அரச ஆதரவுடன் சிறப்பான முறையில் மிகப்பெரும் வர்த்தக சாம்ராஜ்யத்தை கட்டியெழுப்பி இருக்கிறார்கள்.
நீங்கள் எந்த பிரதேசத்தில் சிறியளவில் பூட்சிட்டி அமைப்பை கொண்டு வியாபாரம் செய்ய நினைத்தாலும் விசேட விலையை கொண்டு தான் மக்களை ஈர்க்கலாம்.
சந்தை விலையை விட அதிகரித்த விலையை நீங்கள் தீர்மானிக்கும் போது வசதி வாய்ந்த மக்களை அது எப்போதும் பாதிக்காது. நடுத்தர வர்க்கத்தினர்தான் எந்த பிரதேசத்திலும் அதிகமாக இருப்பார்கள். அவர்களே விலை தொடர்பில் ஆலோசிப்பவர்களும் கூட.
இவ்வாறான தொழிலை வித்தியாசமான முறையில் நீங்கள் கொண்டு சென்றால் தான் அது அனைவராலும் திரும்பி பார்க்கும் வண்ணம் இருக்கும்.
1. பூட்சிட்டி உட்புறமாக உணவகங்களை அமைக்கலாம். அல்லது சிற்றுண்டிகள் அல்லது துரித உணவுகளை வழங்கும் சேவையை அமைக்கலாம்.
2. கேட்டரிங் சேவைகளை துவங்கலாம். அல்லது அதனோடு இணைந்த மொபைல் சேவையை துவங்குங்கள்.
3. இலவச டெலிவரி வசதிகள் மற்றும் வாட்ஸ்ஆப் மார்க்கெட்டிங் வசதிகளை ஏற்படுத்துங்கள்.
4. முகநூல் பக்கங்கள் அமைத்து சாதாரண புகைப்படங்களை உங்கள் லோகோவுடன் மட்டும் இணைத்து பதிவிடுங்கள். தினமும் குறைந்த பட்சம் ஐந்து பதிவுகள் தொடர்ச்சியாக கையாளுங்கள்.
5. குழந்தைகளுக்கான வீட்டுப்பாவனை ஆடைகளை நீங்களே தயாரித்து வழங்குங்கள். அதனை நீங்களே உங்கள் கடையில் சந்தைப்படுத்துங்கள். முகநூல் வழியாக மார்க்கெட்டிங் செய்வதால் உங்கள் வியாபார நிலையங்களை தேடி மக்கள் வருவார்கள்.
6. காலை உணவகம் அல்லது இரவு உணவகம் என அமைக்கலாம். பிரத்தியேகமான சில சமையல்களை மட்டும் கொண்டு சலுகைகளை வழங்கி உங்கள் பூட்சிட்டியை அதன் மூலம் பிராண்டிங் செய்ய முடியும்.
7. உங்களது சூப்பர்மார்க்கெட் எனும் போது பிரத்தியேகமான பொருள் ஒன்றை நீங்கள் சொந்தமாக கொண்டிருப்பதன் மூலம் அதன் மூலம் வேறு வழியில் வருமானம் கிடைக்க வாய்ப்பளிக்கும்.
8. அத்தியவசிய பொருட்களை நீங்களே உருவாக்க வேண்டும். அதாவது பொதியிட்டு விலை குறைத்து முன்னோடியாக விளங்க வேண்டுமெனில் ரிஸ்க் எடுக்கத்தானே வேண்டும்.
9. ஒரு பெயரை நிலை நிறுத்த சிறந்த பொருட்கள் சேவைகளை நீங்கள் உங்கள் நிறுவனத்தோடு இணைத்து கொள்ளுங்கள். அதிலிருந்து கிளைகளாக பிரித்து தொழிலை ஸ்திரத்தன்மை மாறாது பேணிப்பாதுகாக்க வேண்டும்.
காலபோக்கில் எல்லா பொருட்கள் சேவைகளையும் நீங்கள் உங்கள் மூலமாக பிரதேசத்தில் வழங்கும் போது மக்கள் விரும்பும் சிறந்த நிறுவனமாக மாறுவீர்கள்.
முயற்சியுங்கள். முயற்சிதான் மனிதனை மனிதனாக்கி வெற்றிக்கு இழுத்து செல்கிறது.
கமெண்ட் பண்ணுங்கள்
நன்றி
அட்மின்

0 Comments